செய்திகள் மலேசியா
போதைப்பொருள் கடத்தில் ஈடுப்பட்ட விமானி வழக்கு: விசாரிக்க மலேசியாவிற்கு அனுமதி: சைபுடின்
சுபாங்:
கடந்த மாதம் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஜாகர்த்தாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மலேசிய விமானியிடம் வாக்குமூலம் பெறவும், விசாரணைகளை நடத்தவும், மலேசிய விசாரணைக் குழுவிற்கு இந்தோனேசிய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த முன்னேற்றம், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.
இருப்பினும் அவை இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளன என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கானிடமிருந்து, இந்தச் செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து அமைச்சுக்கு ஒரு ஆரம்பகட்ட விளக்கம் கிடைத்தது.
இது இன்னும் செயல்முறையில் உள்ளது, அவர்கள் முதலில் இந்தச் செயல்முறையை முடிக்கட்டும்.
மேலும், விசாரணையில் இருந்து கிடைக்கும் புதிய முன்னேற்றங்கள் ஏதேனும் இருந்தால், அதையும் நான் பின்னர் பகிர்ந்துகொள்வேன்.
சுபாங் கடல்சார் விமான நிலையத்தில் மலேசியன் மேரிடைம் AW189 ஹெலிகாப்டரை ஏற்கும் விழாவிற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2026, 5:53 pm
புஞ்சாக் ஆலாமில் வெள்ளம் ஏற்படக்கூடிய மூன்று பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன
August 14, 2026, 5:32 pm
கிழக்குக் கரை ரயில் பாதை சேவை: டிசம்பர் 2026ஆம் ஆண்டு தொடங்கும்
August 14, 2026, 5:31 pm
திரெங்கானு அரசவையை அவமதித்ததாக ஆடவருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை
August 14, 2026, 4:01 pm
பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் பாராங்கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம்: சந்தேக நபரைப் போலிஸ் தேடுகிறது
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
