நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் பாராங்கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம்: சந்தேக நபரைப் போலிஸ் தேடுகிறது 

ஷா ஆலாம்:

ஷா ஆலாம் ஶ்ரீ மூடாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் ஒருவர் பாராங்கத்தியால் தாக்கப்பட்டார். 

இந்த சம்பவம் நேற்று காலையில் நிகழ்ந்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலிஸ் தலைவர் சருடின் சமா கூறினார். 

இந்நிலையில் பாராங்கத்தியைக் கொண்டு தாக்கிய நபரைப் போலிஸ் தேடி வருவதாக அவர் தெரிவித்தார் 

தன்னை இரு ஆடவர்கள் தாக்கியதாகவும் அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி என நம்பப்படும் ஒரு பொருளை வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். 

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் இடது கையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
 
அவர் தற்போது கிளாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 148, 326இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக சருடின் சமா குறிப்பிட்டார். 

மேலும், துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக ஆயுதச் சட்டத்தின் பிரிவு 8 இன் கீழும் விசாரணை நடத்தப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset