நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றான் மகனைக் கொலை செய்த வழக்கு: முன்னாள் சமையல்காரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்தது 

புத்ராஜெயா:  

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன், நான்கு வயதான மாற்றான் மகனைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட முன்னாள் சமையல்காரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 

சம்பந்தப்பட்ட குற்றவாளி இந்த குற்றத்தைப் புரிந்ததாக போதுமான அளவு ஆதரங்கள் வலுவாக இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது 

நீதிபதி ரொட்ஸாரியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் குற்றவாளியான சாஸ்லி சம்ரியின் மேல்முறையீட்டு மனுவை ஒருமனதாக நிராகரித்தனர். 

சாஸ்லிக்கு மரண தண்டனை மட்டுமே பொருத்தமான தண்டனை என்று கூறிய ரோத்ஸாரியா, இந்தக் குற்றத்தை “கொடூரமானதும் கொடுங்கோன்மையானதுமானது” என்று வர்ணித்தார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.15 மணி வரை, கிள்ளான், ஜாலான் சுங்கை உடாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாஸ்லி இந்தக் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில், சிறுவனின் உடல் மற்றும் தலையில் 29 காயங்கள் இருந்தது தெரியவந்தது. கடுமையான தலைக் காயத்தால் ஏற்பட்ட மழுங்கிய பொருளின் தாக்கமே மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

சிறுவனுக்கு ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான காயங்களைத் தான்தான் ஏற்படுத்தியதாக சாஸ்லி மறுத்தார். வேறு யாரோ சிறுவனைத் தாக்கியிருக்கலாம் என்று அவர் கூறியதுடன், அந்த நபர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு சார்பில் துணை அரசு வழக்கறிஞர் ஈயூ கிம் சியாங் ஆஜரானார். சாஸ்லி சார்பில் வழக்கறிஞர்கள் ரோஸல் அஸிமின் அஹ்மத், அமீர் ஐஸாட் ராணி மற்றும் நபில் அஷ்ரஃப் ரசாக் ஆகியோர் ஆஜரானார்கள்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset