நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிழக்குக் கரை ரயில் பாதை சேவை: டிசம்பர் 2026ஆம் ஆண்டு தொடங்கும் 

கோலாலம்பூர்: 

கிழக்குக் கரை ரயில் பாதை சேவை எதிர்வரும் டிசம்பர் 2026ஆம் ஆண்டு தொடங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். 

சோதனை மற்றும் அங்கீகார செயல்முறைகளை எளிதாக்கி, குறுகிய காலத்தில் முடிப்பதற்கான வழிகளை அமைச்சகம் தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

“எல்லாம் சுமூகமாக நடந்தால், ECRL சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குப் பதிலாக, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தொடங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

செயல்முறையை விரைவுபடுத்தும் எந்த முயற்சியும் பாதுகாப்பை பாதிக்காது என்றும், சேவை தொடங்குவதற்கு முன்பு ECRL-ன் அனைத்து 10 ரயில் தொகுதிகளும் FFR-ஐ கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

665 கிலோமீட்டர் நீளமுள்ள ECRL-ன் முதல் கட்டப் பாதை கிளந்தானின் கோத்தா பாருவை சிலாங்கூரின் கோம்பாக்குடன் இணைக்கிறது, மேலும் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கிளந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியுள்ளன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset