நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானு அரசவையை அவமதித்ததாக ஆடவருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை

சிப்பாங்: 

திரெங்கானு மாநில அரச குடும்பத்தை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் தகவலை வெளியிட்ட ஆடவருக்கு எதிராக மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது 

குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஒத்மான் தெரிவித்தார். 

அரச குடும்பம், மதம் மற்றும் இன உணர்வுகளைத் தொடும் குற்றங்களைத் தீவிரமாகக் கருத வேண்டும் என்றும், அவற்றின் தாக்கம் சமூகத்தில் பரவலாக ஏற்படக்கூடும் என்றும் ஃபுவாட் வலியுறுத்தினார்.

கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் தடுப்புக் காவலில் இருந்த காலத்திலிருந்தே சிறைத்தண்டனை அமலுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அரச நிறுவனத்தை அவமதிப்பது அதன் கண்ணியமும் அந்தஸ்தும் தாழ்வாகக் கருதப்படும் நிலையை உருவாக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset