நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸ் போல் நடித்த நபர்களால் தைவானிய யூடியூபர் கொள்ளையடிக்கப்பட்டார்; 12 பேர் கைது: போலிஸ்

கோலாலம்பூர்:

இங்குள்ள எகோ செராஸ் ரெசிடென்ஸில், ஒரு தைவானிய யூடியூபர் சம்பந்தப்பட்ட கும்பல் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 12 நபர்களை போலிஸ் கைது செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி, ஒரு ஜப்பானியர் தனது முதலாளியான 38 வயது தைவானிய யூடியூபரிடம், தான் தாக்கப்பட்டதாகவும், கொள்ளையடிக்கப்பட்டதாகவும் புகார் அளித்ததாக கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் காயமடைந்ததாகவும், இழப்பு 35,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரிடம் அதிக மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் இருப்பதைச் சந்தேக நபர் அறிந்திருந்ததே, இக் குற்றச் சம்பவத்திற்கான நோக்கமாக நம்பப்படுவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, செராஸ் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையுடன் இணைந்து ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கி, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் பகுதிகளில் 12 நபர்களைக் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 26 முதல் 48 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்களும் நான்கு உள்ளூர் பெண்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட 12 சந்தேக நபர்களில், ஏழு பேர் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 7 அன்று போலிஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

மற்ற ஐந்து பேர் விசாரணைக்கு உதவுவதற்காக ஆகஸ்ட் 13 வரை காவலில் வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset