நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்

உலு லங்காட்:

மலேசியாவின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (ஃபினாஸ்), உள்ளூர் திரைப்படத் துறையில் ஒரு கூட்டுக் குழு செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், சந்தை ஆதிக்கப் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க, திரைப்படக் காட்சிப்படுத்துபவர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களை அழைக்க உள்ளது.

இதுவரை அதிகாரப்பூர்வ புகார்கள் எதுவும் வரவில்லை என்றாலும், இந்தத் துறையின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்வதற்காக, தகவல்களைச் சேகரிக்க ஃபினாஸ் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி அஸ்மிர் சைபுடின் முத்தலிப் கூறினார்.

அதிகாரப்பூர்வமாக, ஃபினாஸுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. ஆனால் அதுபற்றி எங்களுக்குத் தெரியாது என்று அர்த்தமல்ல. நாங்கள் தற்போது தகவல்களைச் சேகரித்து வருகிறோம்.

தற்போதைய நிலவரத்தைப் பற்றி விவாதித்து புரிந்துகொள்வதற்காக, திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் நாங்கள் அழைப்போம்.

ஒரு விநியோகஸ்தர் முழு சந்தையையும் ஆதிக்கம் செலுத்துவது பற்றிய கவலை மட்டுமல்ல, மாறாக ஒரு நிறுவனம் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர் எனத் தொழில் சங்கிலியின் பல நிலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளே முக்கியக் கவலையாக எழுப்பப்பட்டதாக அஸ்மிர் கூறினார்.

இதுவரை, ஒரு நிறுவனம் அதிகபட்சமாக இரண்டு வகை உரிமங்களை மட்டுமே வைத்திருக்க முடியும் என்று ஃபினாஸ் சட்டம் கட்டுப்படுத்துவதால், எந்தவொரு நிறுவனமும் ஒரே நேரத்தில் மூன்று உரிமங்களையும் வைத்திருக்கவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

இருப்பினும், துணை நிறுவனங்கள் அல்லது வெவ்வேறு வணிக நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும், சங்கிலி முழுவதும் உள்ள செயல்பாடுகளின் சாத்தியக்கூறுகளையும் இந்த ஆய்வு உள்ளடக்கும் என்று அஸ்மிர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset