நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நராதிவாட், பட்டானியில் மேலும் ஐந்து தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன: தென் தாய்லாந்து தொடர்ந்து பதற்றமாக உள்ளது

நராதிவாட்:

நராதிவாட், பட்டானியில் உள்ள மூன்று பகுதிகளில் மேலும் ஐந்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து தென் தாய்லாந்தில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் மண்டலம் 4 -இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர்,

காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான சுமார் 13 மணி நேர காலத்திற்குள் அனைத்து குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்ததாகவும், ஆனால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

காலை 8.30 மணியளவில் பட்டானி, யாரிங் மாவட்டம், முகிம் பாங் பூவில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் முதல் சம்பவம் கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து காலை 9.50 மணியளவில் நாரதிவாட், சுங்கை பாடி மாவட்டம், முகிம் ரிகோ, முகிம் சுங்கை பாடி ஆகிய இடங்களில் இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

அதே காலகட்டத்தில் நராதிவாட், ரங்கே மாவட்டம், முகிம் மருபோ டோக்கில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததாக பாதுகாப்பு ரோந்துப் படையினர் தெரிவித்தனர்.

சமீபத்திய சம்பவம் இரவு சுமார் 9.10 மணியளவில் நிகழ்ந்தது.

பட்டானி, பனாரே மாவட்டத்தில் உள்ள ஃபோ மிங் துணை மாவட்ட நகராட்சி அலுவலகத்தின் வாகனக் கொட்டகையை, தானியங்கி ஆயுதங்களுடன் வந்த 10க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய நபர்கள் கொண்ட குழு ஒன்று தாக்கி வெடிவைத்துத் தகர்த்தது.

மேலும், அலுவலகக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்திற்குத் தீ வைத்து, மூன்று அரசு வாகனங்களையும் சேதப்படுத்திய பின்னர் தப்பிச் சென்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset