நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்

கோலாலம்பூர்:

2026ஆம் ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

மக்களிடையே சுதந்திர உணர்வை வரவேற்று, தேசபற்றை வலுப்படுத்த வேண்டும் என்ற மடானி அரசாங்கத்தின் எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்தச் சிறப்புரை அமையும் என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

கோலாலம்பூர், மெர்டேக்கா சதுக்கத்தில் மாலை மணி ஐந்து தொடங்கி பல்வேறு உற்சாகமான நிகழ்ச்சிகளுடன் பிரதமரின் சிறப்புரை நிகழ்ச்சி நடைபெறும்.

நுட்பங்கள் நிறைந்த Ambang Merdeka அசைவூட்டும் நிகழ்ச்சி, அனைத்துலக விளக்கு கண்காட்சி படைப்புகள், மலேசிய ஒருமைப்பாட்டு மடானி கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சுதந்திர தின இசை நிகழ்ச்சியின் சிறப்புப் பகுதி ஆகியவை அதில் இடம் பெறும்.

இக்கொண்டாட்டத்தின் செயலகமான தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, பிரதமரின் சிறப்புரையை நேரில் காண பொதுமக்களை மெர்டேக்கா சதுக்கத்திற்கு அழைக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset