நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடப்பிதழ்; மக்கள் டிக்கெட்டுகளை முகப்பிடங்களில் வாங்க வேண்டும்: குடிவரவுத் துறை இயக்குநர்

புத்ராஜெயா:

தற்போதுள்ள அனைத்துலக அல்லது உள்நாட்டுச் சட்டங்கள், 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான செல்லுபடியாகும் காலத்துடன் கடப்பிதழை வழங்குவதிலிருந்து எந்தவொரு நாட்டையும் தடுப்பதில்லை.

கடப்பிதழில் நீண்ட செல்லுபடியாகும் காலம், தனிநபர்கள் எந்தவொரு அனைத்துலக இடத்திற்கும் விமானத்தில் பயணம் செய்வதையும் தடுப்பதில்லை என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் கூறினார்.

கடப்பிதழின் நீண்ட செல்லுபடியாகும் காலம், குறிப்பாக அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும்போது நுகர்வோரைப் பாதிக்கிறது என்பதையும் அவர் மறுத்தார்.

இருப்பினும், சில விமான நிறுவனங்களுடன் பயணச்சீட்டு முன்பதிவுகளில் மட்டும் சிக்கல்கள் ஏற்படலாம்.

மேலும் இந்த விஷயம் தொடர்பாக நாங்கள் பல புகார்களைப் பெற்றுள்ளோம்.

கடப்பிதழ் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டிருந்தால் எல்லைக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

எனவே, அனைத்துலக விமான நிறுவனங்களுக்கு அறிவிப்பு வழங்கியதோடு, கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் முடிவை மலேசியா இறுதி செய்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset