நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜயா பெர்டானா நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்புதல், அந்நிறுவனம் ஜோ லோவின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே வழங்கப்பட்டது: அமீர் ஹம்சா

கோலாலம்பூர்:

புத்ராஜயா பெர்டானா நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்புதல், அந்நிறுவனம் ஜோ லோவின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே வழங்கப்பட்டது.

இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் இதனை கூறினார்.

கடந்த 2014இல் புத்ராஜயா பெர்டானா பெர்ஹாட் நிறுவனத்தின் 30 சதவீதப் பங்குகளை தாபோங் ஹாஜி வாரியம் வாங்குவதற்கான முழு ஒப்புதல் செயல்முறை நடந்தது.

இது அந்நிறுவனம் யூபிஜி பெர்ஹாட் மூலம் ஜோ லோவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் நடைபெற்றது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் பதிவுசெய்யப்பட்ட சத்திய வாக்குமூலத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

புத்ராஜயா பெர்டானா பெர்ஹாட் நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ ரோஸ்மான் அப்துல்லாவின் பிரமாண வாக்குமூலத்தின்படி, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனம், 2014 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மூன்று கட்டங்களாக, புத்ராஜயா பெர்டானாவின் துணை நிறுவனமான புத்ரா பெர்டானாவுக்கு  170 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது.

பிரதமரின் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் சூல்கிஃப்லி ஹசன் அவர்கள், தாபோங் ஹாஜி மீதான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து மக்களவையில் நடத்திய சிறப்பு கூட்டத்தின் நிறைவு அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset