செய்திகள் மலேசியா
எம்.எஸ்.யு - அல் அமீன் கலை & அறிவியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
கோலாலம்பூர்:
மலேசியாவின் Management and Science University (MSU) மற்றும் இந்தியாவின் கும்பகோணத்தில் அமைந்துள்ள Al’ Ameen Arts & Science College for Women ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது
உயர்கல்வி, கல்வி பரிமாற்றம் மற்றும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக MSU கல்வி நிறுவனத்தின் தோற்றுநரும் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோ வீரா டாக்டர் முஹம்மத் ஷுக்ரி அப்துல் யஜித் கூறினார்.
இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையே அறிவு, அனுபவம் மற்றும் கல்வி வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வி பரிமாற்றம், கூட்டு பயிற்சி நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றை முன்னெடுக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஷா ஆலாமில் உள்ள MSU பல்கலைக்கழகத்தில் நடந்த MOU புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அல் அமீன் கலை & அறிவியல் கல்லூரியின் தலைவர் ஹாஜி டாக்டர் எம்.என். முஹம்மத் ரஃபி, முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் ஹமித் தாவூத், பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
