நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

யோகியை பாஜகவை வீட்டுக்கு அனுப்பி விட்டது: அகிலேஷ் விமர்சனம்

லக்னோ:

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவருடைய சொந்த தொகுதியான கோரக்பூரில் பாஜக களமிறக்கியுள்ளதால், அவரை பாஜக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பிவிட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, அவருடைய சொந்த ஊரான கோரக்பூரில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் கடந்த 2017இல் மாநில முதல்வராக அவர் பொறுப்பேற்கும் வரை கோரக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அவர் இருந்துள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் மதுரா தொகுதியில் போட்டியிடுவார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரயாக்ராஜ், அயோத்தி அல்லது தியோபந்திலிருந்து போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது, அவர் அவருடைய சொந்த தொகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.

அதன் மூலம் அவரை பாஜக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் லக்னோவுக்கு திரும்பிவர இனி தேவையிருக்காது என்பதால், அவர் கோரக்பூரிலேயே இருந்துவிடலாம் என எண்ணுகிறேன். அவருக்கு வாழ்த்துகள் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset