செய்திகள் மலேசியா
பகடிவதைக்கு உள்ளாகும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் இணைந்து சிக்கலுக்கான தீர்வைக் கொண்டு வர வேண்டும்: கைருடின் அபு ஹனிபா வேண்டுகொள்
ஈப்போ:
அண்மையில் பகடிவதைக்கு உள்ளான ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிக்கல்களைக் களைய வழிவகை செய்ய வேண்டும் என்று பேராக் மாநில கல்வி விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் அபு ஹனிபா கூறினார்.
ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதைத் தவிர்த்து, இரு தரப்பினரும் சமரசப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
"இந்த விவகாரம் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது, மேலும் இது குறித்த புகார்களை விசாரிக்க மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும் பேராக் மாநில கல்வித் துறைக்கும் நாங்கள் உத்தரவிட்டோம்.
விசாரணை முழுமையாக முடிவடைந்துவிட்டது, பொதுப் புகார் மேலாண்மை அமைப்பில் உள்ளவாறு அதன் முழு அறிக்கையையும் கண்டுபிடிப்புகளையும் நான் பெற்றுள்ளேன்" என்று ஈப்போவில் உள்ள தோடக் அகாடமி டிஜிட்டல் கல்வி மையத்தைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
சிம்மோர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் அந்த ஆசிரியை, நடப்பாண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் பணி இடத்தில் மிரட்டல் மற்றும் உணர்வுரீதியான இன்னல்களுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
எவரும் மீதும் தான் பழி சுமத்தவில்லை என்று குறிப்பிட்ட கைருதீன், இரு தரப்பினருக்கும் தங்களின் சொந்த வாதங்களும் ஆதாரங்களும் இருப்பதாகத் தெரிவித்தார்.
"பள்ளி நிர்வாகம் குறிப்பிட்ட சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் ஒவ்வொரு நடவடிக்கையும் பரிந்துரைக்கப்பட்ட முறையின்படியே இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
அந்த ஆசிரியை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது குறித்து, அந்த வழக்கைக் கையாளும் மருத்துவ அதிகாரிதான் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். "ஆசிரியர் சிகிச்சை பெற்றுள்ளார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், எனவே நாம் எந்தவித அனுமானங்களையும் செய்யாமல் மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருப்போம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 4:52 pm
சிலாங்கூர் மாநில சுக்மா விளையாட்டு போட்டி: கூட்டரசு அரசின் நிதியுதவி இல்லாமல் நடத்த முடியும்
August 8, 2026, 4:49 pm
சரவாக் மாநில பொதுச்சேவை ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் அறிவிப்பு
August 8, 2026, 3:44 pm
பண்டான் இண்டாவில் 14 வயது இளம் பெண் மாயம்: போலிஸ் தகவல்
August 8, 2026, 3:16 pm
ஆடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் குறித்து ஐஜிபி, சைபுடின் விளக்கமளிக்க வேண்டும்: ராயர்
August 8, 2026, 3:14 pm
மலாக்கா மாநிலத் தேர்தல் இடங்கள் ஒதுக்கீடு; பேச்சுவார்த்தை மேசையில் இறுதி செய்யப்படும்: அஷ்ராப்
August 8, 2026, 3:13 pm
தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை: முழுமையான விசாரணைக்கு உட்படுத்த மாமன்னர் உத்தரவு
August 8, 2026, 1:48 pm
கிள்ளான் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மஹிமாவில் உறுப்பினராக பதிவு பெற்றது
August 8, 2026, 1:10 pm
