நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில சுக்மா விளையாட்டு போட்டி: கூட்டரசு அரசின் நிதியுதவி  இல்லாமல் நடத்த முடியும் 

பெட்டாலிங் ஜெயா: 

கூட்டரசு அரசாங்கத்தின் எந்தவொரு நிதியுதவில் இல்லாமல் சிலாங்கூர் மாநில சுக்மா போட்டி நடத்தி முடிக்க மாநில அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு, தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார். 

சிலாங்கூர் மாநில சுக்மா போட்டியின் இறுதிகட்ட தயார்நிலையில் மாநில அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக அவர் சொன்னார். 

சிலாங்கூர் மாநிலம் ஏற்று நடத்தும் சுக்மா போட்டி சிலாங்கூர் மாநிலம் முழுவதும் 52 இடங்களில் நடக்கிறது. 

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு மாநில அரசங்கம் பயன்படுத்தி இந்த முறை போட்டியை நடத்தவுள்ளது. 50 மில்லியன் ரிங்கிட்டிற்கும் குறைவான அளவில் மொத்தமாக விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 

2026 சுக்மா விளையாட்டு போட்டிக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் கூட்டரசு அரசாங்கத்திடம் எந்தவொரு நிதியுதவியையும் கோராது என்று நஜ்வான் ஹலிம் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset