நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எல்லைகள் கடந்த குற்றங்களைத் தடுக்கவும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவு 

கோலாலம்பூர்: 

நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள், பிரதான நுழைவாயில்களில் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் உத்தரவிட்டார் 

இந்த நடவடிக்கையினால் போதைப்பொருள் கடத்தல், குற்றங்கள், எல்லைகள் கடந்த குற்றச்செயல் ஆகியவைகளைத் தடுக்க வழிவகுக்கும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார். 

நாட்டின் முதன்மையான நுழைவாயிலில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து மேலோங்க செய்ய வேண்டும். இதற்காக தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள், அனைத்து துறைகளுக்கான ஒத்துழைப்பு குறித்து ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை இஸ்தானா புக்கிட் துங்குவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் சந்தித்தார். 

இந்த சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கும் மேல் நடந்ததாக அரண்மனை வட்டாரம் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset