செய்திகள் மலேசியா
தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை: முழுமையான விசாரணைக்கு உட்படுத்த மாமன்னர் உத்தரவு
கோலாலம்பூர்:
தாபோங் ஹாஜி நிறுவனம் மீதான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையை முழுமையான விசாரணைக்கு உட்படுத்துமாறு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று உத்தரவிட்டார்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவில்,
பொறுப்பான அனைத்து தரப்பினரும் தகுந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று அவர் கூறினார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு தரப்பினரையும் சிக்கலில் ஆழ்த்தாமல், இந்த விவகாரம் குறித்த விசாரணை முழுமையாக நடத்தப்பட வேண்டும்.
உண்மையிலேயே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், யாரும் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கக் கூடாது.
மிக முக்கியமாக, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது, என்று மாமன்னர் கூறினார்.
முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்க மாமன்னர் ஒப்புக் கொண்டார்.
இன்று இஸ்தானா புக்கிட் துங்குவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 3:44 pm
பண்டான் இண்டாவில் 14 வயது இளம் பெண் மாயம்: போலிஸ் தகவல்
August 8, 2026, 3:16 pm
ஆடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் குறித்து ஐஜிபி, சைபுடின் விளக்கமளிக்க வேண்டும்: ராயர்
August 8, 2026, 3:14 pm
மலாக்கா மாநிலத் தேர்தல் இடங்கள் ஒதுக்கீடு; பேச்சுவார்த்தை மேசையில் இறுதி செய்யப்படும்: அஷ்ராப்
August 8, 2026, 1:48 pm
கிள்ளான் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மஹிமாவில் உறுப்பினராக பதிவு பெற்றது
August 8, 2026, 1:10 pm
கெடாவில் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு: இரு சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது
August 8, 2026, 1:00 pm
