நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் குறித்து ஐஜிபி, சைபுடின் விளக்கமளிக்க வேண்டும்: ராயர்

ஜார்ஜ்டவுன்:

ஆடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் குறித்து ஐஜிபி, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும்.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் இதனை வலியுறுத்தினார்.

அந்த ஆடியோ உள்ளடக்கம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இருவர் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட இருவர் குறித்து உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயில், தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் இஸ்மாயில் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும்.

அந்த ஆடியோவில் மத உணர்வுகளைத் தூண்டியதாகக் கூறப்படுவதால் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தெரிவித்தபோதிலும், அவர்கள் என்ன ஆத்திரமூட்டும் கருத்துக்களைக் கூறினார்கள் என்பதை விளக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
அவர்களின் ஒலி ஒளிபரப்பில் அப்படி என்ன சர்ச்சைக்குரிய விஷயம் இருக்கிறது? .

பொதுமக்கள் இந்த பதில்களைக் கோருகின்றனர், என்று அந்த ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset