நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டான் இண்டாவில் 14 வயது இளம் பெண் மாயம்: போலிஸ் தகவல் 

அம்பாங்: 

கடந்த வெள்ளிக்கிழமை பண்டான் இண்டா வர்த்தக மையத்தில் உள்ள ஶ்ரீ மாயாங் அடுக்குமாடியில் 14 வயது இளம் பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இளம் பெண்ணைக் கண்டுப்பிடிக்க போலிஸ் தரப்பு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. 

அந்த இளம்பெண் டியா ஸாராவியெட்டா என்றும் அவருக்கு வயது 14 என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இளம் பெண் காணாமல்போனதாக ஆகஸட் 7ஆம் தேதி தங்கள் தரப்புக்குப் புகார் ஒன்று கிடைத்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் துணை கமிஷ்னர் கைருல் அனுவார் காலிட் கூறினார். 

"இருப்பினும், காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே, பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிப்பதற்கான குடும்பத்தினரின் முயற்சிகள் தோல்வியடைந்தன," என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்

மேலும், அந்த இளம் வயதினரின் கடைசி இருப்பிடம், அம்பாங்கில் உள்ள பாண்டன் இந்தா வணிகப் பூங்காவில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாங் அடுக்குமாடிக் குடியிருப்பு எனக் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.

-மவித்திரன் 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset