நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசிய விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மற்றொரு மலேசியர் கைது

ஜாகர்த்தா:

இந்தோனேசிய விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மற்றொரு மலேசியர் கைது செய்யப்பட்டார்.

சிடோவார்கோவிலுள்ள ஜுவாண்டா அனைத்துலக விமான நிலையத்தில், ஒரு கோர்செட்டின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோகிராம் மெத்தம்பெட்டமைன், 1,000க்கும் மேற்பட்ட எக்ஸ்டஸி மாத்திரைகளைக் கண்டுபிடித்தது.

இதைத் தொடர்ந்து, 22 வயதான மலேசியர் ஒருவரை இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூரிலிருந்து சுரபாயாவிற்கு வந்த பாத்தேக் ஏர் விமானத்தில் வந்திறங்கிய சந்தேக நபர், டெர்மினல் 2-ல் தடுத்து வைக்கப்பட்டதாக அதிகாரிகள்  ஜகார்த்தா குளோப் ஐடி செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது உடலைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கோர்செட்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, மொத்தம் 990 கிராம் மெத்தம்பெட்டமைன் அடங்கிய நான்கு பொட்டலங்களையும், 1,089 எக்ஸ்டஸி மாத்திரைகள் அடங்கிய நான்கு பொட்டலங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

நிதிப் பிரச்சினைகள், கடன்களால் சிரமப்பட்டதால், ஒரு அனைத்துலக போதைப்பொருள் கும்பலுக்குக் கூரியராகப் பணியாற்ற ஒப்புக்கொண்டதாக அந்தப் பெண் புலனாய்வாளர்களிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset