செய்திகள் மலேசியா
ஆகஸ்ட் மாதம் மெர்டேக்கா மாதம்: நாட்டின் சுதந்திரத்தின் வரலாறும் பின்னணியும்
கோலாலம்பூர்:
மலேசிய நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உன்னதமான நாள் ஆகஸ்ட் 31 ஆகும்.
மலேசியாவின் சுதந்திர வரலாறு என்பது பல நூற்றாண்டுகால அந்நியர் ஆட்சியின் பிடியிலிருந்து மீண்ட கதையாகும்.
1511-இல் போர்த்துகீசியர்களின் வருகையுடன் தொடங்கிய அந்நிய ஆதிக்கம், பின்னர் டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷார்களின் கைகளுக்கு மாறியது.
பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியினாலும், இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட ஜப்பானியர்களின் கொடூர ஆக்கிரமிப்பாலும் மலாயா மக்கள் கடுமையான இன்னல்களையும் பொருளாதாரச் வீழ்ச்சியையும் சந்திக்க நேரிட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மக்களிடையே சுதந்திர தாகம் தீவிரமடைந்தது. பிரிட்டிஷார் கொண்டுவர முயன்ற 'மலாயன் யூனியன்' திட்டத்திற்கு எழுந்த கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்து இன மக்களும் ஒன்றுபடத் தொடங்கினர்.
மலாயாவின் சுதந்திரத்திற்காக துங்கு அப்துல் ரஹ்மான், துன் டான் செங் லொக், துன் விதி சம்பந்தன் ஆகியோர் பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்
சிறந்த அணுகுமுறையினாலும், இனங்களுக்கு இடையிலான வலுவான ஒற்றுமையினாலும் 1956-ஆம் ஆண்டு லண்டன் ஒப்பந்தத்தின் மூலம் மலாயாவிற்குச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது.
1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்திற்கு இடையே, துங்கு அப்துல் ரஹ்மான் "மெர்டேக்கா!" என்று ஏழு முறை முழக்கமிட்டு மலாயாவின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தார்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் பிரிட்டிஷாரின் கொடி இறக்கப்பட்டு, சுதந்திர மலாயாவின் தேசியக் கொடி கம்பீரமாகப் பறக்கவிடப்பட்டது. அதுவே இன்றைய நவீன மலேசியாவின் உதயத்திற்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2026, 11:01 pm
இந்தோனேசிய விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மற்றொரு மலேசியர் கைது
August 4, 2026, 5:31 pm
சமூக ஊடகத்தைப் பதிவு செய்யும்போது மை கார்ட் கட்டாயம்: தொடர்பு அமைச்சு தகவல்
August 4, 2026, 4:56 pm
