நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடகத்தைப் பதிவு செய்யும்போது மை கார்ட் கட்டாயம்: தொடர்பு அமைச்சு தகவல் 

கோலாலம்பூர்: 

சமூக ஊடகத்தைப் பதிவு செய்யும்போது மை கார்ட் அடையாள அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

16 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொடர்பு அமைச்சு தெரிவித்தது

சிறார்கள் பாதுகாப்பு அம்சங்களின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொடர்பு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. 

வயது சரிபார்ப்பு,  மை கார்ட் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்.

இணக்கத்தை உறுதி செய்வதற்காக, மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC), உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களால் CPC செயல்படுத்தப்படுவதைக் கண்காணித்து வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset