செய்திகள் மலேசியா
11,500 ரிங்கிட் ஊழல் வாங்கிய விவகாரம்: தீயணைப்பு அதிகாரி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
அலோர் ஸ்டார்:
2024, 2025ஆம் ஆண்டுகளில் ஆதரவு கடிதம் பெறுவதற்காக 11,500 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக தீயணைப்பு அதிகாரிக்கு எதிராக இங்குள்ள அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இருப்பினும், தனக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் மறுத்து அவர் விசாரணை கோரினார்.
நீதிபதி பிரிசிலியா ஹேமாமாலினி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட்ட 40 வயதான ஜொஹாரி அஸ்வார் மறுத்தார்
தீயணைப்பு உரிமம் ஆதரவு கடிதம் பெறுவதற்காக அவர் கடந்த 2024ஆம் ஆண்டு காவ் கொக் அன் என்ற நிறுவத்தின் உரிமையாளரிடமிருந்து 1500 ரிங்கிட் பணத்தை லஞ்சமாக வாங்கினார்.
மற்றொரு நிறுவன உரிமையாளரான 27 வயது லிம் ஷான் ஷியானிடம் இருந்து RM10,000 ரொக்க லஞ்சம் கேட்டுப் பெற்றார். இந்த சம்பவம் கடந்த 2025ஆம் ஆண்டு நிகழ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது
அவர் MACC சட்டம் 2009 இன் பிரிவு 16(a)(B) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார் மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ் தண்டனைக்குரியவர்.
அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து RM16,000 ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 9 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனத் தீர்மானித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2026, 11:01 pm
இந்தோனேசிய விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மற்றொரு மலேசியர் கைது
August 4, 2026, 5:31 pm
சமூக ஊடகத்தைப் பதிவு செய்யும்போது மை கார்ட் கட்டாயம்: தொடர்பு அமைச்சு தகவல்
August 4, 2026, 3:00 pm
