செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் நியமனம் நடைமுறைப்படியே நடந்தது: மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் தகவல்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் நியமனம் நடைமுறைப்படியே நடந்தது என்று புதிய மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கூறினார்.
மாநிலத்தின் நடைமுறைப்படியே அனைத்தும் சரியாக நடந்தது என்று விஸ்மா நெகிரியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரின் நியமனத்தில் வெளித் தரப்பினரின் தலையீடு இருந்ததாகவும் ராய்ஸ் யத்திம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஜுவாசே சட்டமன்ற தொகுதியில் வெற்றிப்பெற்ற இஸ்மாயில் லாசிம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் YANG DI PERTUAN BESAR, TUANKU MUHRIZ TUANKU MUNAWIR முன்னிலையில் மந்திரி பெசார் பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் BN-PN கூட்டணி 25 இடங்களையும் நம்பிக்கை கூட்டணி 11 இடங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2026, 11:01 pm
இந்தோனேசிய விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மற்றொரு மலேசியர் கைது
August 4, 2026, 5:31 pm
சமூக ஊடகத்தைப் பதிவு செய்யும்போது மை கார்ட் கட்டாயம்: தொடர்பு அமைச்சு தகவல்
August 4, 2026, 4:56 pm
11,500 ரிங்கிட் ஊழல் வாங்கிய விவகாரம்: தீயணைப்பு அதிகாரி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 4, 2026, 3:00 pm
