செய்திகள் மலேசியா
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான விமானி; கேஎல்ஐஏ சோதனை அதிகாரியை புக்கிட் அமான் அடையாளம் கண்டது: ஹுசைன்
ஷாஆலம்:
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான விமானி விவகாரத்தில் கேஎல்ஐஏ சோதனை அதிகாரியை புக்கிட் அமான் அடையாளம் கண்டுள்ளது.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை தெரிவித்தார்.
கடந்த செவ்வாயன்று இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் மலேசிய விமானி தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஒருவரை போலிசார் அடையாளம் கண்டுள்ளது.
இருப்பினும் இவ்விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தற்போதைக்கு, நுழைவாயிலில் உள்ள சோதனைப் பிரிவில் பணிபுரியும் 30 வயதுகளில் உள்ள ஒருவரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
விசாரணைக்கு உதவுவதற்காக அவர் விரைவில் அழைக்கப்படுவார்.
தேவைப்பட்டால், நாங்கள் அவரைக் கைது செய்வோம்.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2026, 11:01 pm
இந்தோனேசிய விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மற்றொரு மலேசியர் கைது
August 4, 2026, 5:31 pm
சமூக ஊடகத்தைப் பதிவு செய்யும்போது மை கார்ட் கட்டாயம்: தொடர்பு அமைச்சு தகவல்
August 4, 2026, 4:56 pm
11,500 ரிங்கிட் ஊழல் வாங்கிய விவகாரம்: தீயணைப்பு அதிகாரி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 4, 2026, 3:00 pm
