செய்திகள் மலேசியா
ரவாங் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் கல்வியமைச்சின் தலைமை இயக்குநர் தலையிட்டதால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும்: டத்தோ சுரேஷ் நம்பிக்கை
கோலாலம்பூர்:
ரவாங் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் கல்வியமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ முகமத் அஸாம் அமாட் தலையிட்டதால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவத் டத்தோ சுரேஷ் இதனை கூறினார்.
கிட்டத்தட்ட 900த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் ரவாங் தமிழ்ப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த புதிய கட்டிடம் பள்ளிக்கு பெரும் பயனாக இருக்கும்.
இதனால் இந்த புதிய கட்டிட திட்டத்தை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர்.
ஆனால் இந்த புதிய கட்டிடம் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வரும் திடலில் கட்டப்பட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான அடித்தளமும் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடலில் புதிய கட்டிடத்தை கட்டினால் மாணவர்கள் எங்கு விளையாடுவார்கள். அவர்களின் புறப்பாட நடவடிக்கைகள் எங்கு மேற்கொள்ளப்படும்.
பள்ளியின் விளையாட்டு போட்டிகளுக்கு வேறு திடல்களை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை வரும்.
இதன் அடிப்படையில் தான் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம், தற்போதைய மாணவர்களின் பெற்றோர்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கண்டன பேரணியும் இவர்கள் நடத்தினர்.
இதன் பயனாக தற்போது கல்வியமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ முகமத் அஸாம் அமாட் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண கால அவகாசம் கேட்டுள்ளார்.
தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநரே தலையிட்டது நமது போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
ஆக நாம் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம். பிரச்சனைக்கு நல்ல பதில் கிடைக்கும் என நம்புவோம்.
இவ்வேளையில் இந்த பிரச்சினைக்கு குரல் கொடுத்த முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எது எப்படி இருந்தாலும் ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கண்டிப்பாக வேண்டும்.
ஆனால் அந்த கட்டிடம் பள்ளி திடலில் கட்டப்படக்கூடாது. அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டசுரேஷ் நம் டத்தோ சுரேஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2026, 11:01 pm
இந்தோனேசிய விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மற்றொரு மலேசியர் கைது
August 4, 2026, 5:31 pm
சமூக ஊடகத்தைப் பதிவு செய்யும்போது மை கார்ட் கட்டாயம்: தொடர்பு அமைச்சு தகவல்
August 4, 2026, 4:56 pm
11,500 ரிங்கிட் ஊழல் வாங்கிய விவகாரம்: தீயணைப்பு அதிகாரி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
August 4, 2026, 3:00 pm
