நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ சுங்கை பாரியில் மாணவிகள் உயிரிழந்த சம்பவம்: விசாரணைக்கு உதவுவதற்காக 10 பேரிடம் போலிசார் விசாரணை

ஈப்போ: 

ஈப்போ, புந்தோங்கில் உள்ள சுங்கை பாரி பாழடைந்த ஃப்ளாட்டில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி இரண்டு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவுவதற்காக போலிஸ் 10 பேரை அழைத்துள்ளனர். 

உயிரிழந்த மாணவிகளின் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இந்தச் சாட்சிகளில் அடங்குவர்.

"நாங்கள் இந்தச் சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளோம்," என்று பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமத் அல்வி சைனல் ஆபிதீன் தெரிவித்தார்.

இதனிடையே, இச்சம்பவத்தில் அலட்சியம் இருப்பதாகக் கருதி, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

அந்த 15 மாடி வீட்டுமனை வளாகத்திற்கு வேலி அமைக்கப்படாததே இந்த அசம்பாவிதத்திற்கு முக்கியக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கைவிடப்பட்ட திட்டம் போலக் காட்சியளிக்கும் அப்பகுதிக்குள் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் தடையின்றி நுழைய முடிகிறது என அக்குடும்பத்தினர் சுட்டிக்காட்டினர்.

இத்தகைய பாதுகாப்புச் சீர்கேடுகளே இந்தச் சோகமான சம்பவத்திற்கு வழிவகுத்ததாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதற்கிடையில், புதிய தடயங்களைப் பெறுவதற்காக மாணவிகளின் தனிப்பட்ட உடமைகள் மீதான தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காகப் போலிசார் காத்திருக்கின்றனர்.

அந்த அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான முழுமையான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாகக் காவல் துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து தேவையற்ற ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset