நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட் கிள்ளானில் நாயை கொன்றவர்கள் மீது உடனடியாக வழக்குத் தொடரப்பட வேண்டும்: வழக்கறிஞர் பார்த்திபன்

கோலாலம்பூர்:

போர்ட் கிள்ளானில் நாயை கொன்றவர்கள் மீது உடனடியாக வழக்குத் தொடரப்பட வேண்டும்.

பிரபல வழக்கறிஞர் எம். பார்த்திபன் இதனை வலியுறுத்தினார்.

போர்ட் கிள்ளானில் ஒரு நாய் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் அனைத்து நபர்கள் மீதும், விலங்குகள் நலச் சட்டங்கள் உண்மையாகவே அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், எந்தவித சமரசமும் இன்றி வழக்குத் தொடரப்பட வேண்டும்.

இந்தச் செயல் மனித விழுமியங்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல், தேசிய சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாகவும் இருப்பதால், விரைவான நடவடிக்கை அவசியம்.

விலங்குகளுக்கும் எந்த விதமான துன்புறுத்தல், கொடுமையிலிருந்தும் பாதுகாக்கப்படும் உரிமை உண்டு.

எனவே குற்றவாளிகள் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அனுமதிக்கப்படக்கூடாது.

இந்தச் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும், அதிகாரிகள் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் எந்தவித சமரசமுமின்றி தண்டிக்க வேண்டும்.

இதுபோன்ற செயல்கள் ஒழுக்கமற்றவை மட்டுமல்ல, உறுதியாகக் கையாளப்படாவிட்டால், சமூகத்தில் ஒரு வன்முறைக் கலாச்சாரத்தைத் தூண்டும் ஆற்றலையும் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset