நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரியில் மஇகா இரு தொகுதிகளில் தோல்வி; மலாய் வாக்காளர்களை அம்னோ தலைவர்கள் சந்திக்காததும் முக்கிய காரணம்: டத்தோ முருகையா

ரவாங்:

நெகிரியில்  மஇகா இரு தொகுதிகளில் தோல்வி கண்டதற்கு மலாய் வாக்காளர்களை அம்னோ தலைவர்கள் சந்திக்காததும் முக்கிய காரணமாகும்.

மஇகா உதவித் தலைவர் டத்தோ முருகையா இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது.
இதில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளது.

தேசிய முன்னணி ஆட்சி அமைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் மஇகா போட்டியிட்ட இரு தொகுதிகளில் தோல்வி கண்டது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் ஒட்டுமொத்த மஇகாவினரும் இத்தொகுதியில் இறங்கி கடுமையாக உழைத்தனர்.

கடைசி நாள் வரை மஇகாவின் சாதகமாக தான அனைத்தும் இருந்தது.

ஆனால் தேர்தல் நாளில் அதிகமான மலாய், இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை.

அதே வேளையில் தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் மஇகா தலைவர்கள் இறங்கி வேலை செய்தனர்.

ஆனால் மஇகா போட்டியிட்ட தொகுதிகளுக்கு அக்கட்சியினர் வரவில்லை.

குறிப்பாக மலாய் வாக்காளர்களை அம்னோ தலைவர்கள் சந்திக்காததும் மஇகாவின் தோல்வில்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆக இதுபோன்ற பிரச்சினைகளை வரும் காலங்களில் எதிர்கொள்ள தேசிய முன்னணியுடன் மஇகா உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தும்.

ரவாங் நியூ கிரின் பார்க் மஇகா கிளை ஏற்பாட்டில் மஇகா 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தலைவர்களுக்கான பாராட்டு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ முருகையா இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset