நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: முன்னணி தலைவர்கள் வாக்களித்தனர் 

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மொத்தம் 36 சட்டமன்ற இடங்களுக்கும் இன்று தேர்தல் நடத்தப்படும் வேளையில் 103 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். 

இன்று காலை தொடங்கி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னணி தலைவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொண்டனர். 

அவ்வகையில் நெகிரி செம்பிலான் பராமரிப்பு அரசாங்கத்தின் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் ராஜா மெலெவார் ஆசிரியர் கல்விக் கழகத்தில் தனது ஜனநாயக கடமையை மேற்கொண்டார். 

நம்பிக்கை கூட்டணி சார்பாக லிங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் அங்கு வாக்களிப்பு நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார். 

அவரைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் தனது மனைவி டத்தின்ஶ்ரீ ராஜா சல்பியாவுடன் வந்து வாக்கு ரந்தாவ் சீனப்பள்ளியில் வாக்கு செலுத்தினார். 

மேலும், நெகிரி செம்பிலான் மாநில அம்னோ தொடர்புக்குழு தலைவர் டத்தோஶ்ரீ ஜலாலுடின் அலியாஸ் ஜெலெபுவில் உள்ள கம்போங் புத்ரா தேசிய பள்ளியில் தனது மனைவியுடன் வாக்கு செலுத்தினார். 

சென்னா தொகுதி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் DAP கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் சிரம்பான், கெல்பின் சீனப்பள்ளியில் வாக்களித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset