நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தல் பரப்புரை காலங்களில் 92 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டன: டான்ஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் தகவல் 

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரை காலங்களில் 92 போலிஸ் புகார்களையும் அதில் 24 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக அரச மலேசிய போலிஸ் படையின் தலைவர் டான்ஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் கூறினார். 

மொத்தமுள்ள போலிஸ் புகார்களில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் உட்படுத்திய சிறு அளவிலான குற்றங்களும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்களும் விசாரணை செய்யப்பட்டது. 

லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு நான்கு போலிஸ் புகார்கள் செய்யப்பட்டதாக அவர் சொன்னார். 

"இதுவரை, வேட்பாளர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டதாக எந்தக் காவல் துறை அறிக்கைகளும் இல்லை.

மேலும், ஒட்டுமொத்தமாக, 36-வது மாநில சட்டமன்றத்தில் (DUN) PRN செயல்முறை சிறப்பாகவும், சுமுகமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது," என்று அவர் கூறினார்.

அனைத்து சம்பவங்களும் 1954 தேர்தல் குற்றங்கள் சட்டம் மற்றும் 1948 நிந்தனை சட்டம் மற்றும் 1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாளர்களும் தொடர்ந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்

மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை மேம்படுத்த 
நெகிரி செம்பிலான்  மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அரண்மனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset