நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி குறைந்தது 19 தொகுதிகளைக் கைப்பற்றும்: டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை 

கோலா பிலா: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கை கூட்டணி குறைந்தது 19 சட்டமன்ற தொகுதிகளை வெல்லும் என்று நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் இயக்குநர் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார் 

அண்மைய பிரச்சாரம் மற்றும் களநிலவரங்களின் அடிப்படையில் இந்த இலக்கு வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருனின் தலைமையும், நம்பிக்கை கூட்டணி  தலைமையிலான மாநில அரசின் இரண்டு தவணை நிர்வாகப் பதிவும் கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார். 

ஜொகூரில் ஏற்பட்டதாகக் கூறப்படும் “நீல அலை” நெகிரி செம்பிலான் PRN முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கூற்றையும் அமிருடின் நிராகரித்தார்.

இந்தக் சொல்லாடல் குறிப்பிட்ட தரப்பினரால் வாக்காளர்களை பாதிக்கும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதற்கு மாறாக, ஹராப்பான் தனது பிரசாரத்தில் மலேசிய மடானி  கொள்கை மற்றும் மக்களின் ஒற்றுமையை தொடர்ந்து முன்னிறுத்தும் என அவர் தெரிவித்தார்.

இன அடிப்படையிலான அரசியல் பேச்சுகளுக்கு மாற்றாக, அனைத்து மக்களுக்குமான ஒற்றுமை மற்றும் தீர்வுகளை முன்வைப்பதே ஹராப்பானின் அணுகுமுறை என்றும் அவர் கூறினார்.

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கடந்த ஜூன் 5ஆம் தேதி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய மாநில அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநில சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது.

நாளைய வாக்குப்பதிவில் மொத்தம் 867,151  வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset