நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் தாயும் மகளும் படுக்கையறையில் சடலமாக மீட்பு: பண்டார் பாரு தம்புனில் பரபரப்பு 

ஈப்போ: 

ஈப்போவில் உள்ள பண்டார் பாரு தம்புன் பகுதியில் அமைந்திருக்கும் வீடொன்றில் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டனர் 

இந்த சம்பவம் அந்த வீட்டின் படுக்கையறையில் நிகழ்ந்ததாக ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் துணை கமிஷ்னர் முஹம்மத் நஜிப் ஹம்சா கூறினார். 

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 9.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் உடல்களில் எந்தவொரு குற்றச் செயல்கள் நிகழ்ந்திருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில் தெரிய வந்தது 

இந்த சம்பவத்தை அடுத்து போலிஸ் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 

விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதால் பொதுமக்கள் தேவையற்ற அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்று நஜிப் ஹம்சா கேட்டுக்கொண்டார். 

தாயும் அவரது இரு பிள்ளைகளும் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset