நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல்: நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது 

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் நாளை ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவில் நெகிரி செம்பிலான் மாநில மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்ளவுள்ளனர். 

இந்த தேர்தலில் 36 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படும் நிலையில் 867,151 தகுதி பெற்ற வாக்காளர்கள் உள்ளதாக மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் 103 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 

கடந்த செவ்வாய்கிழமை நடந்த முன்கூட்டியே வாக்களிப்பு 91.06 விழுக்காடு வரை பதிவானது.  அரச மலேசிய போலிஸ் படை, மலேசிய இராணுவ படையைச் சேர்ந்த வீரர்கள் வாக்கினை செலுத்தினர். 

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநில அரசாங்கத்தை  அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset