நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கழிவறையில் கத்திக்குத்து காயங்களுடன் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது: கல்லூரி மாணவ ஜோடி கைது

ஜொகூர்பாரு:

குளுவாங், தாமான் செத்தியா முத்தியாராவில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 19 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவர்களை போலிஸ் கைது செய்துள்ளது.
ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் இதனை உறுதிப்படுத்தினார்.

குளுவாங் மாவட்ட போலிஸ் தலைமையகத்திற்கு மதியம் சுமார் 1 மணியளவில்  தகவல் கிடைத்தது.

அதன்படி, ஒரு மாணவி சமீபத்தில் பிரசவித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குளுவாங்கில் உள்ள இன்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு அந்த மாணவி தனது ஆசிரியரைத் தொடர்பு கொண்டுள்ளார் 

மருத்துவரின் பரிசோதனை முடிவுகளில், அந்த மாணவி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருப்பதும், அவர் மற்றொரு பெண் குழந்தையைச் சுமந்திருப்பதும் கண்டறியப்பட்டது.

மேலும் அம்மாணவி வசித்து வந்த வாடகை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், ஒரு பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தையின் ஆரம்பகட்ட பரிசோதனையில், அதன் உடலில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்ததும், ஆனால் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பந்தப்பட்ட பெண்ணின் காதலன் என்று நம்பப்படும் 19 வயது ஆண் மாணவர் ஒருவரை போலிஸ் கைது செய்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset