செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் தேர்தல்; வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது எதிர்க்கட்சியின் பலவீனமான தந்திரம்: ஜாஹித்
தம்பின்:
நெகிரி செம்பிலான் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது எதிர்க்கட்சியின் பலவீனமான தந்திரமாகும்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் நபர்கள் மீது விசாரணை நடத்தி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, பல காவல் துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது எதிர்க்கட்சியின் ஒரு விரக்தியான செயலாகும் என்று அவர் கூறினார்.
நான் குற்றச்சாட்டுகளை முன்வைக்க விரும்பவில்லை.
ஆனால் இந்த மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், பிரச்சார சுற்றின் இறுதியில் பல்வேறு தந்திரங்கள் கையாளப்பட்டதால், பல விஷயங்கள் நடந்தன.
அவற்றில், டத்தோஸ்ரீ ஜலாலுடின் நேற்று குறிப்பிட்டதும் ஒன்று. அதாவது, சில இடங்களில் 'கனமழை' (பண நன்கொடைகள்) மண்ணை நனைக்கிறது,
ஆனால் அது தேர்தல் ஆணையச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு முறை அல்ல.
ஆதாரங்கள், சாட்சிகளுடன் போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
விவேகமான முறையில், நல்ல முறையில் பிரச்சாரம் செய்யுங்கள்.
வாக்காளர்கள், நெகிரி செம்பிலான் மக்களின் சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்புங்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
