செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஜோசப் விஜய் பயணம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று மாலை காரில் புறப்பட்டு அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த முதல்வர் விஜய், மெட்ரோ ரயிலில் ஏறி நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணித்தார்.
பயணசீட்டு பெற்றுக்கொண்டு மெட்ரோ ரயிலில் மக்களுடன் அமர்ந்து பயணித்த அவருடன், பயணிகள் உற்சாகமாகக் கலந்துரையாடினர்.
நந்தனத்தில் இறங்கிய முதல்வர் விஜய், அங்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்துக்கு சென்று அதிகாரிகளுடன் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர், அங்கிருந்து காரில் கிண்டி கத்திப்பாரா சென்ற முதல்வர், கிண்டியில் 101 அடி உயரத்தில் கட்டப்பட்ட மெட்ரோ பாலத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கிண்டியிலிருந்து சாலை மார்க்கமாக போரூர் சென்ற அவர், மெட்ரோ 2-ஆம் கட்ட வழித்தடத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலில் ஏறி பூந்தமல்லி வரை பயணம் செய்து ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் அதே ரயிலில் போரூர் வரை பயணித்து, போரூரில் இறங்கி ஆய்வை நிறைவு செய்தார்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் முதல்வர் ஆய்வு செய்த நிலையில், சாலைகள், மெட்ரோ நிலையங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி அவரை நோக்கி கையசைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
