நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டென்னிஸ் விளையாட்டாளர் நோவாக் ஜோக்கோவிச்சின் விசா அனுமதியை ஆஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் ரத்து செய்தது 

மெல்பெர்ன்:

பிரபல டென்னிஸ்  ஆட்டக்காரர் நோவக் ஜோகோவிக்கின் (Novak Djokovic) விசாவை வெள்ளிக்கிழமை இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. 

COVID-19  தடுப்பூசி போடாதவருக்கு எங்கள் நாட்டில் நுழைய அனுமதி இல்லை என்று ஆஸ்திரேலியா அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

COVID-19 நோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அவர், சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோக்கோவிச்சின் விசா அனுமதியில் பிழை இருந்ததால், கடந்த வாரம் ஆஸ்திரேலிய குடிநுழைவு அதிகாரிகள், விசாவை ரத்து செய்து அவரை ஹோட்டலில் தடுத்துவைத்தனர்.

Novak Djokovic pictured for first time inside airport as Australian  officials reject visa | Tennis | Sport | Express.co.uk

பின்னர், அதன் தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் வெற்றிபெற்று விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், குடிநுழைவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் (Alex Hawke) தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜோக்கோவிச்சின் விசா அனுமதியை மீண்டும் ரத்து செய்ததாக இன்று அறிவித்தார். 

பொதுநலன் கருதி அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

ஆதாரம் : AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset