நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முக்மின் அமைப்பின் பிள்ளைகளின் நலன், கல்வி திட்டங்களுக்காக 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரதமர்

பட்டர்வொர்த்:

முக்மின் அமைப்பைச் சேர்ந்த பிள்ளைகளின் நலன், கல்வி திட்டங்களுக்காக 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

முக்மின் அமைப்பின் இந்திய முஸ்லிம் உருமாற்றத்திற்கான கட்டமைப்பு 2030இன் தொடக்க விழாவில் பேசிய போது பிரதமர்,

வேலை வாய்ப்புகள், கடன்கள், கல்வி, வணிகம், வீட்டுவசதி தொடர்பானவை உட்பட, இந்திய முஸ்லிம் சமூகம் எழுப்பும் பிரச்சினைகளைக் கேட்டு ஆராய அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளது.

இன்னும் ஓரங்கட்டப்பட்டதாக உணரும் மக்கள் குழுக்கள் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

எனவே, மேம்பாடுகளைச் செயல்படுத்த ஏதுவாக, முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அதனால்தான் சகோதர சகோதரிகள் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நாமும் முன்னேற வேண்டும்.

நான் சிறந்ததைச் செய்துவிட்டேன் என்றோ அல்லது நான் பரிபூரணமானவன் என்றோ ஒருபோதும் நினைப்பதில்லை.

எனது பலவீனங்களை நான் அறிவேன், நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

குறிப்பிட்ட சில விஷயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. கடன்கள், வேலை வாய்ப்புகள் குறித்து நான் கவனம் செலுத்துவேன்.

அதே சமயம், எந்தவொரு இனத்தின் உரிமைகளையும் மறுக்காமல் மக்களின் குறைகளைக் கேட்பதும், தேவைக்கேற்ப உதவிகள் நியாயமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதுமே அரசாங்கத்தின் அணுகுமுறை என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset