நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் கட்சியின் இனவாத உணர்வுகளை மஇகா கண்டிக்கிறது; தேசிய முன்னணி தனித்துச் செயல்பட வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

சிரம்பான்:

பாஸ் கட்சியின் இனவாத உணர்வுகளை வன்மையாக கண்டிக்கும் மஇகா,  தேசிய முன்னணி தனித்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.


மலாய் அல்லாத சமூகத்தினரின் உணர்வுகளை அடிக்கடி புண்படுத்தும் வகையில்  பாஸ் தலைவர்களின் அறிக்கைகள் வேதனையளிக்கிறது.

ஆகையால் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதைப் பரிசீலிக்குமாறு தேசிய முன்னணிக்கு மஇகா அழைப்பு விடுக்கிறது.

சில பாஸ் தலைவர்கள் இன, மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் மீண்டும் மீண்டும் கூறும் கருத்துக்கள், எந்தவொரு அரசியல் ஒத்துழைப்பையும் சிக்கலாக்குவது மட்டுமல்லாமல்,

பல இன வாக்காளர்களைத் தங்கள் பக்கம் வென்றெடுப்பதற்கான தேசிய முன்னணியின் முயற்சிகளையும் பலவீனப்படுத்துகின்றன என்று அவர் விளக்கினார்.

தேசிய முன்னணி தொடர்ந்து இந்த வகையான சித்தரிப்புடன் தொடர்புபடுத்தப்படும்போது, ​​அது எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது.

அதனால்தான், மிதவாதக் கொள்கையைப் பாதுகாப்பதற்காக பிஎன் தனது சொந்த பலத்தில் நிற்பதே சிறந்தது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்







தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset