செய்திகள் மலேசியா
30 பில்லியன் ரிங்கிட் முதலீடு, 50,000 வேலை வாய்ப்புகள்: தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் புதிய அரசாங்கத்தை அமைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளை ஈர்ப்பதாகவும், 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் தேசிய முன்னணி உறுதியளித்துள்ளது.
உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு ஊக்குவிப்பாக பயன்படுத்தும் வகையில், சிறு நகரங்களுக்குப் பெரிய அளவிலான வணிகங்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட 'ஒரு மாவட்டம், ஒரு பெரிய நிறுவனம்' என்ற கொள்கையையும் தேசிய முன்னணி முன்னிலைப்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் உள்ள மற்ற பொருளாதார உறுதிமொழிகளில், நெகிரி செம்பிலானை முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதுள்ள தொழில்துறைப் பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல், மாநிலத்தின் ஹலால் மையத்திற்குப் புத்துயிர் அளித்தல் மற்றும் 'தரைவழித் துறைமுக' வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை அதில் அடங்கும்.
நேற்று இரவு வெளியிடப்பட்ட மாநிலத் தேர்தலுக்கான கூட்டணியின் தேர்தல் அறிக்கை, பொருளாதாரம், மேம்பாட்டிற்கு முதன்மை முக்கியத்துவம் அளித்து, ஒன்பது பிரிவுகளின் கீழ் 88 முன்னெடுப்புகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.
நெகிரி மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான்,
தொழில்நுட்ப, தொழிற்கல்வித் திட்டங்களில் 20,000 பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், குறிப்பாக மலேசியா விஷன் வேலி வழித்தடத்தில் 5,000 அதிக வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தேசிய முன்னணி பாடுபடும் என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:19 am
நெகிரி மந்திரி புசார் பதவிக்கு ஜலாலுடின் தான் முதன்மை தேர்வு: ஜாஹித்
July 24, 2026, 10:28 pm
ஜொகூரில் துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் சட்டத்திற்கு உட்பட்டது: ஓன் ஹபிஸ்
July 24, 2026, 8:38 pm
ஈப்போவில் புதர் நிறைந்த பகுதியில் இரண்டு இந்திய இளம் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன
July 24, 2026, 4:58 pm
