செய்திகள் மலேசியா
ஜொகூரில் துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் சட்டத்திற்கு உட்பட்டது: ஓன் ஹபிஸ்
ஜொகூர்பாரு:
ஜொகூரில் துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் சட்டத்திற்கு உட்பட்டது என்று மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி கூறினார்.
ஜொகூர் மாநிலத்தில் 10 துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இந்த நியமனம் மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பிற்குள் சட்டபூர்வமாக மேற்கொள்ளப்பட்டதும்
மேலும் மாநில நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.
கருத்து தெரிவிக்கும் உரிமையை மாநில அரசு மதிப்பதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தை அரசியல் நோக்கில் மட்டும் பார்க்காமல் தற்போதைய நிர்வாகத் தேவைகள், சட்ட நிலை, மக்களின் நலன் ஆகிய அடிப்படைகளிலும் அணுக வேண்டும் என்றார்.
ஜொகூர் மாநில சட்ட ஆலோசகரின் அறிவுரையின் அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக தெரிவித்த ஓன் ஹபிஸ் காஸி, துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ல.
அவர்களுக்கு ஆட்சிக்குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் உரிமையோ, கொள்கை, நிதி, நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரமோ இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மாநில அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் ஜொகூர் மாநில அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களிடமே தொடர்ந்து உள்ளது.
எனவே, இந்த நியமனம் புதிய செயல் அதிகாரத்தை உருவாக்குவதோ, ஏற்கனவே உள்ள அதிகாரங்களை மாற்றுவதோ, மாநில அரசின் நிர்வாக அமைப்பை மாற்றியமைப்பதோ அல்ல என்று அவர் விளக்கமளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:19 am
நெகிரி மந்திரி புசார் பதவிக்கு ஜலாலுடின் தான் முதன்மை தேர்வு: ஜாஹித்
July 24, 2026, 8:38 pm
ஈப்போவில் புதர் நிறைந்த பகுதியில் இரண்டு இந்திய இளம் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன
July 24, 2026, 4:58 pm
