செய்திகள் மலேசியா
உணவகப் பணியாளர்கள் பற்றாக்குறைப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சுகளுக்கும், தொடர்புடைய துறைகளுக்கும் ஒரு மாத கால அவகாசம்: பிரதமர்
பட்டர்வொர்த்:
உணவகப் பணியாளர் பற்றாக்குறைப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சுகளுக்கும், தொடர்புடைய துறைகளுக்கும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் உள்ள உணவக உரிமையாளர்கள் பணியாளர் பற்றாக்குறை குறித்து அளிக்கும் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆக இப்பிரச்சினையை தீர்க்க, அதிகபட்சமாக ஒரு மாத கால அவகாசம் அளித்து, அமைச்சுகள் தொடர்புடைய துறைகளுக்கு உத்தரவிடப்படும்.
உணவகங்கள் உட்பட சில துறைகளில் உள்ள தொழிலாளர் காலி இடங்களை நிரப்ப வேண்டிய அவசரத் தேவை இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
இருப்பினும், நாட்டில் ஏற்கனவே திறமையற்றவர்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதால், பணியிடக் காலி இடங்களை நிரப்புவதற்காக மட்டும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகைக்கு அரசாங்கத்தால் முழுமையாகத் திறந்துவிட முடியாது என்று அவர் கூறினார்.
பணியாளர் பற்றாக்குறைப் பிரச்சினை குறித்து உணவக உரிமையாளர்களிடமிருந்து நான் புகார்களைக் கேட்டிருக்கிறேன்.
கல்வியறிவற்றவர்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு நாட்டில், காலி இடங்களை நிரப்புவதற்காக மட்டும் எங்களால் முழுமையாகத் திறந்துவிட முடியாது.
ஆனால், உணவகங்கள் உட்பட சில துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
எனவே திங்கட்கிழமை முதல், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் நான் ஒரு காலக்கெடுவை விதிக்கிறேன்.
இந்த முன்னுரிமையை அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும், இது கட்டாயம் முடிக்கப்பட வேண்டும்.
நேற்று இரவு இங்குள்ள பிக்கா மாநாட்டு மையத்தில், முக்மினின் இந்திய முஸ்லிம் உருமாற்றத்திற்கான கட்டமைப்பு 2030இன் தொடக்க விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாஹுல் தாவூத், பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயோவ் உட்பட ஆயிரக்கணக்கானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:19 am
நெகிரி மந்திரி புசார் பதவிக்கு ஜலாலுடின் தான் முதன்மை தேர்வு: ஜாஹித்
July 24, 2026, 10:28 pm
ஜொகூரில் துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் சட்டத்திற்கு உட்பட்டது: ஓன் ஹபிஸ்
July 24, 2026, 8:38 pm
ஈப்போவில் புதர் நிறைந்த பகுதியில் இரண்டு இந்திய இளம் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன
July 24, 2026, 4:58 pm
