நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவதூறு  குற்றச்சாட்டுகளிலிருந்து செகுபார்ட் விடுவிக்கப்பட்டார்: கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு 

கோலாலம்பூர்- 

கடந்த 2024ஆம் ஆண்டு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் செகுபார்ட் என்று பரவலாக அறியப்படும் பட்ருல் ஹிஷாம் அவர்கள் இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். 

அரசுத் தரப்பு வழக்கின் முடிவில், அவருக்கு எதிரான முகாந்திரமான வழக்கை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்பதைக் கண்டறிந்த பின்னர், நீதிபதி சித்தி அமினா கசாலி இந்த முடிவை எடுத்தார்.

செகுபார்ட், 1948 ஆம் ஆண்டு தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 4(1)(c)-இன் கீழ், ஏப்ரல் 6, 2024 அன்று மதியம் 12.15 மணிக்கு, இங்குள்ள தாமான் புக்கிட் செராஸில் தனது முகநூலில் ஒரு அவதூறு  பதிவை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மேலும், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதே சட்டத்தின் துணைப்பிரிவு 4(1)-இன் கீழ் RM5,000-க்கு மிகாத அபராதம் அல்லது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்.

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset