செய்திகள் இந்தியா
பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதப் போராட்டத்தின் 21-வது நாளில் டெல்லி போலீசாரால் அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார்.
சப்தர்ஜங் மருத்துவமனையில் சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
போராட்டக்களத்தில் இருந்து சோனம் வாங்சுக் அப்புறப்படுத்தப்பட்டதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் இருந்து சோனம் வாங்சுக் அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து, அபிஜித் தீப்கே சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளார்.
ஜந்தர் மந்தரில் கூடி இருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அபிஜித் தீப்கே, “சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது முற்றிலும் தவறானது. இதுபோன்ற நடவடிக்கையை நமது அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை. இது அப்பட்டமான சர்வாதிகாரம்.
இதுவரை நாங்கள் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வந்தோம். இந்த இழிவான செயலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
நாங்கள் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து அகற்றச் சொன்னால் அவர்கள், சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றுகிறார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
ஜந்தர் மந்தரை நோக்கி பொதுமக்கள் பெருமளவில் திரள வேண்டும். அபிஜித் தீப்கே ஏன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
இப்போது அவர்கள் ஜந்தர் மந்தருக்கு வர வேண்டும். அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?” என அவர் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
