நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலேசியாவுக்கு உதவ சிங்கப்பூர் தயாராக உள்ளது: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்

சிங்கப்பூர்:

அண்மைய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியாவுக்கு மேற்கொண்டு உதவ காத்திருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு தேவைப்படும் பட்சத்தில் சிங்கப்பூர் உதவிக்கரம் நீட்டும் என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியாவுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு, "இந்தக் கடினமான வேளையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு உறுதியுடன் துணை நிற்கிறது," என விவியன் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

"வெள்ளப்பெருக்கு தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதின் அப்துல்லாவுக்கு 2021, டிசம்பர் மாதம் தாம் கடிதம் எழுதியதாகவும், அதில் வெள்ளப் பாதிப்பு தொடர்பாக சிங்கப்பூரின் அனுதாபத்தை தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அதே கடிதத்தில் சிங்கப்பூர் எத்தகைய உதவியையும் செய்யத் தயாராக உள்ளதைக் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், மலேசியா, பிலிப்ஃபீன்ஸில்  வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் திரட்டிய நிதிக்கு, சிங்கப்பூர் அரசு 251,160 ரிங்கிட் வழங்கி உள்ளதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் மலேசியா ஒரு நூற்றாண்டில் சந்தித்திராத பெருமழையையும் வெள்ளப்பெருக்கையும் எதிர்கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset