செய்திகள் தமிழ் தொடர்புகள்
அரசு மின்னணு சேவை மையங்கள், ஆதார் பதிவு மையங்கள் ஜூலை 20 அன்று செயல்படாது
சென்னை:
தமிழ்நாடு தரவுப் பதிவுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபி குமார் மற்றும் பொதுச் செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்:
நிரந்தர ஆதார் பதிவு மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கும் ஒப்பந்ததாரரான தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு மின்னணு சேவை மையம், ஒவ்வொரு மாதமும் அவர்களின் சம்பளத்திலிருந்து முறையற்ற வகையில் பிடித்தம் செய்வதுடன், பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ உள்ளிட்ட சலுகைகளையும் முறையாக வழங்கவில்லை.
முதலமைச்சரும், தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு ஒரு தீர்வைக் காண வேண்டும்.
மேலும், மின்னணு சேவை மைய ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 20 அன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் மின்னணு சேவை மையங்கள் மற்றும் ஆதார் பதிவு மையங்களில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு மின்னணு சேவை மையங்கள் மற்றும் ஆதார் பதிவு மையங்கள் அன்று செயல்படாது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 10:06 pm
இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
September 5, 2026, 10:07 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
September 3, 2026, 3:14 pm
சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது
September 3, 2026, 2:07 pm
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
September 2, 2026, 2:55 pm
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயா்த்தியது தமிழக அரசு
August 30, 2026, 9:40 pm
