செய்திகள் தமிழ் தொடர்புகள்
வியட்னாம் படகு விபத்தில் 15 இந்தியர்கள் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்
சென்னை:
வியட்நாமில் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். 'சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
பாதிக்கப்பட்டோருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கிடவும், இறந்தோர் உடல்களை தமிழகம் கொண்டுவர இந்திய தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு, பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம், வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இந்த படகு விபத்தில் 15 இந்தியர்களும் 4 வியட்னாமியர்களும் பலியானார்கள். அவர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 2 பேர் கேரளா, 5 பேர் கர்னாடகாவைச் சேர்ந்தவர்கள்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 10:02 pm
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் விமான நிலையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
