செய்திகள் தமிழ் தொடர்புகள்
வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 25 சமூக நீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி
சென்னை:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணையை நேற்று(ஜுலை.10) முதல்வர் விஜய் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் “வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 25 சமூக நீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " ‘கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான ஆணைகளையும், பணியாற்ற முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்தையும் முதல்வர் விஜய் வழங்கியுள்ளார்.
கருணை அடிப்படையிலான இந்த உதவி வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் இத்தகைய உதவிகள் ஒரு சாராருக்கு மட்டுமின்றி, பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நிகழ்ந்த இதே போன்ற, இதை விட இன்னும் மோசமான நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.
இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டிய பல்வேறு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் கூட, அவர்களில் முதன்மையானவர்கள், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 22% ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டத்தின் போது காவல் துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டிலும், பிற அடக்குமுறைகளிலும் கொல்லப்பட்ட 21 பேர் உள்ளிட்ட 25 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கும் அரசு வேலை தர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 10:06 pm
இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
September 5, 2026, 10:07 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
September 3, 2026, 3:14 pm
சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது
September 3, 2026, 2:07 pm
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
September 2, 2026, 2:55 pm
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயா்த்தியது தமிழக அரசு
August 30, 2026, 9:40 pm
