செய்திகள் தமிழ் தொடர்புகள்
அரசு பள்ளியில் விஜய் நிகழ்ச்சியை நேரலையாக காட்டிய பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்: அமைச்சர் ராஜ்மோகன்
கரூர்:
கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட த.வெ.க நிகழ்ச்சி, அரசு பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமானது.
பல்வேறு கல்வி ஆர்வலார்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், ``அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி! அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:29 pm
பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்: அவருக்கு வயது 90
September 10, 2026, 12:11 pm
தம்பி விஜய்யின் சைகையையும் மிசாவின் கைது குறித்தும் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு விளக்கம்
September 10, 2026, 10:41 am
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்றிரவு லண்டன் புறப்படுகிறார்
September 9, 2026, 10:04 pm
தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமானது
September 9, 2026, 1:23 pm
22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு
September 7, 2026, 10:06 pm
இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
September 5, 2026, 10:07 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
September 3, 2026, 3:14 pm
